வணக்கம் நண்பர்களே..!
போட்டோஷாப்பில் மேகம் (முகில்) கொண்டுவருவது எப்படி என்பதைப் பார்ப்போம்.
இது ஒரு எளிதான செயல்முறைதான். அழகான மேகங்களை நீங்களே உருவாக்கிவிடலாம்.
மேகங்கள் எஃபக்டை கொண்டுவர ஃபில்டர் வசதி பயன்படுகிறது. Filter மெனுவில் உள்ள வசதிகளைப் பற்றி எதிர்வரும் பாடங்களில் படிக்கவிருக்கிறோம்.
1. போட்டோசாப்பில் ஒரு புதிய டாக்குமெண்டை திறந்துகொள்ளுங்கள். (Ctrl+N)
2. அடுத்து "D" பிரஸ் செய்யுங்கள். (இது பேக்ரவுண்ட், ஃபோர் கிரவுண்ட் கலர்களை முறையாக கருப்பு வெள்ளையாக மாற்றிவிடும்.
3. பிறகு Filter menu கிளிக் செய்யுங்கள்.
4. Render என்ற ஆப்சன்மீது கர்சரை வையுங்கள்.
5. அதிலிருந்து வெளிப்படும் மெனுவில் Clouds என்பதை கிளிக் செய்யுங்கள்.
மாறிய பிறகு கிடைத்த மேகங்கள்...கீழே...
வண்ண மேகங்கள் கிடைக்க ஃபோர்கிரவுண்ட் கலர் என்பதைக் கிளிக் செய்து தோன்றும் color Picker pallet ல் உங்களுக்கு விருப்பமான வண்ணத்தை தேர்வு செய்த பிறகு மேற்சொன்ன வழிமுறைகளின் படி பில்டர் மெனுவில் ரெண்டர் என்பதில் உள்ள குளூட்ஸ் தேர்வு செய்தால் உங்களுக்கு வண்ண மயமான மேகங்கள் தோன்றிடும். (நான் ஃபோர் கிரவுண்ட் கலராக புளூ கலரை தேர்வு செய்துள்ளேன்.)
நன்றி...
Tags: easy clouds making in Photoshop, making clouds in Photoshop, Photoshop, Photoshop CS3, Photoshop Tutorial in Tamil.
மிகவும் பயனுள்ள தகவல். பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி..திரு சித்திரவீதிக்காரன் அவர்களே..!
Delete