Saturday 23 November 2013

போட்டோஷாப்பில் Text Type Tool பயன்படுத்துவது எப்படி?

கடந்த பதிவொன்றில் லேயர்கள் என்றால் அடுக்கு என்ற பொருளில் வரும் எனப் பார்த்தோம். ஒவ்வொரு படத்தினையும் அல்லது ஒவ்வொரு எஃபக்டினையும் ஒவ்வொரு அடுக்கில் செய்யும்பொழுது, அவற்றைத் தேவையானபொழுது அந்த லேயரை மறைக்கவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ முடியும்.

அப்டேட்: இப்பதிவிற்கான வீடியோ கீழே:

<

டெக்ஸ்ட் லேயர்கள்


போட்டோஷாப்பில் டெக்ஸ்ட்களை உருவாக்கும்பொழுது டெக்ஸ்ட் லேயர்கள் உருவாக்கப்படும். 

ஒவ்வொரு முறையும் புதியதாக டெக்ஸ்ட்டை உருவாக்கும்போது, அவை புதிய லேயர்களாக தோன்றும், புதிய லேயர்களில் டெக்ஸ்ட்கள் தோற்றுவிக்கப்படும்.
டைப் டூல்

டைப் டூல் பற்றி ஏற்கனவே படித்திருக்கிறோம். இது டெக்ஸ்ட்டை உருவாக்கப்பயன்படுகிறது.

டைப் டூலில் நான்கு வகை உண்டு. ஒன்று 

1. Horizontal Type tool
2. Vertical Type tool
3. Horizontal Type Mask tool
4. Vertical Type Mask tool

இந்த நான்கு டைப்டூல்களைக் கொண்டு போட்டோஷாப் டாக்குமெண்ட்களில் உங்களுக்கு வேண்டிய டெக்ஸ்ட்களை உருவாக்கலாம். 

மாஸ்க் டைப் டூலைப் பயன்படுத்தி எழுத்துக்களில் மாஸ்க் எஃபக்ட்டை உருவாக்கலாம். மாஸ்ட் டைப் டூலை கிளிக் செய்து தட்டச்சு செய்ய டாக்குமெண்டில் நீங்கள் கிளிக் செய்யும்பொழுது தானாகவே பின்னணி நிறம் உங்களுக்கு மாறிவிடும். இது மாஸ்கிங் எஃபக்ட் (Masking Effect) உருவாவதற்காக அவ்வாறு மாறும்.

மாஸ்க் எபக்ட் பற்றி வெகுவிரைவில் படிக்க விருக்கிறோம். மாஸ்கிங் எபக்ட் மூலம் போட்டோக்களில் பல்வேறு டிசைன்களை ஏற்படுத்தலாம். அதுப்பற்றி விரிவாக மாஸ்க்கிங் எஃபக்ட் என்ற பாடத்தில் படிக்க விருக்கிறோம்.

டெக்ஸ்ட் டூல் பயன்படுத்தும் முறை:

டெக்ஸ்ட் டூலை பயன்படுத்துவதற்கு டூல்ஸ் பாக்சில் "T" என்ற டூலை கிளிக் செய்து பெறலாம். அல்லது விசைப் பலகையில் "T" என்பதை அழுத்துவதன் மூலமும் டெக்ஸ்டூலை செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம்.

டெக்ஸ்ட்டூலை செயல்பாட்டிற்கு கொண்டு வந்த பிறகு உங்களுக்குத் தேவையான போட்டோஷாப் டாக்குமெண்டின் மீது அந்த டூலை கிளிக் செய்தால் கர்சர் தோன்றும். பிறகு உங்களுக்குத் தேவையான டெக்ஸ்ட்டை நீங்கள் கீபோர்ட் மூலம் உள்ளிடலாம்.

டெக்ஸ்ட் டூலை உயிர்பித்த உடனேயே உங்களுக்கு மேலே அந்த டூலிற்கான துணைப்பட்டியல் அடங்கிய மெனுபார் (Option Bar or Option Menu) தோன்றிவிடும்.

அதிலிருந்து வேண்டிய எழுத்துக்களுக்கு தேவையான செட்டிங்சை அமைத்துக்கொள்ளலாம். உதாரணமாக எழுத்துக்களின் அளவு மாற்றுவது, எழுத்துரு மாற்றுவது, warp word, alignment, color, character and paragraph palette என்பன போன்ற மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

டெக்ஸ்ட்டைகளை வேர்ட் டாக்குமெண்டில் டைப் செய்வதைப் போல பத்தியாக டைப் செய்துகொள்ளலாம். அவற்றை அலைண்மெண்ட் (Left, right, justify) செய்துகொள்ளலாம்.  

இப்பதிவிற்கான வீடியோ மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றி நண்பர்களே..!

- பவ்யாகுட்டி.

Tags: layers, photoshop, text tool, tools.

5 comments:

  1. விளக்கங்களுக்கு மிக்க நன்றி தோழரே...

    ReplyDelete
  2. Followers ஆகி விட்டேன்... தொடர்கிறேன்...

    ReplyDelete
  3. Followers ஆகி விட்டேன்... தொடர்கிறேன்...

    ReplyDelete
  4. உபயோகமான பாடம். மிக்க நன்றி!

    ReplyDelete