Wednesday, 4 September 2013

போட்டோசாப்பில் பூ டிசைன் செய்வது எப்படி? [Video Tutorial]

போட்டோஷாப்பில் பூ டிசைன் செய்வது மிக மிக எளிமையானதுதான்.

மிக எளிய முறையில் போட்டோஷாப்பில் பூ வரைவதற்கு Transform Tool பயன்படுகிறது.

இந்த டூலைப் பயன்படுத்தி படங்களை  நமது விருப்பத்திற்கேற்க நேராகவோ, தலைகீழாகவோ அல்லது வலது, இடது பக்கமாகவோ திருப்பிக்கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் விரும்பிய ஒரு படத்தை  சிறியதாக மாற்றியும், பெரியதாக விரித்தும் பயன்படுத்தலாம். 
how to make flower design simply in photoshop cs3

ஃப்ரீ டிரான்ஸ்பார்ம் டூலைப் பயன்படுத்தி ஒரு பூ டிசைனை உருவாக்கும் எளிய முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

  • போட்டோஷாப்பில் புதிய டாக்குமென்ட் ஒன்றினை திறக்கவும் (Ctrl+N)
  • கீபோர்டில் "U" -எழுத்தை அழுத்துங்கள். இப்பொழுது Custom Shape Tool - தேர்ந்தெடுக்கப்படும். அது செயல்பாட்டிற்கு வந்துவிடும்.
  • பிறகு ஏதேனும் Shape தேர்ந்தெடுத்து வரையுங்கள்
  • அந்த Shape- தேர்ந்தெடுத்துக்கொண்டு Ctrl+T அழுத்துங்கள். இப்போது டிரான்பார்ம் டூல் செயல்பாட்டுக்கு வந்துவிடும். 
  • டிரான்பார்ம் டூல் படத்தின் மீது இருக்கும்போது அதில் உள்ள நடுப் புள்ளியை கீழே இறக்குங்கள். 
  • இப்பொழுது இடது மேல் மூளையில் டிரான்ஸ்பார்ம் டூலைப் பயன்படுத்தி தேவையான படத்தின் உருவத்தின் அளவிற்கு தகுந்த மாதிரி ரொட்டேட் செய்யுங்கள்.
  • பிறகு மேலுள்ள டிக் மார்க்கை கிளிக் செய்யுங்கள்.
  • அதற்கு CTRL+ALT+Shift+T அழுத்துங்கள்.
  • இவ்வாறு CTRL+ALT+Shift அழுத்திக்கொண்டு T யை மட்டும் விட்டு விட்டு அழுத்தும்பொழுது வட்டவடிவமான ஒரு பூ டிசைன் உங்களுக்கு கிடைத்திருக்கும். 

இதற்கு ஸ்டைல் ஆப்சனைப் பயன்படுத்தி ஏதேனும் ஒரு ஸ்டைலைக் கொடுத்து மேலும் அழகூட்டலாம்.

படித்தும் புரியவில்லையா.. இதோ உங்களுக்கா பூ டிசைன் செய்வது எப்படி என்ற வீடியோ டுடோரியல் கீழே.. 

how to make flower design simply in photoshop cs3

 


பதிவில் ஏதேனும் சந்தேகம் எனில் பின்னூட்டம் இடுங்கள்.

This is photoshop video tutorial, it explains how to draw and make flower simply using custom shape and free transform tool.

நன்றி.

Tags: Flower design, transform tool, making flower in photoshop.

2 comments:

  1. ஷேப் டூலை செலக்ட் செய்து CTRL+ALT+SHIFT+T அழுத்தும் போது டாக்குமென்ட் காலத்தை தாண்டி செல்கிறது ஏன்?

    ReplyDelete