Tuesday 10 September 2013

டவுன்லோட் செய்யப்பட்ட Photoshop Brushகளைப் போட்டோஷாப்பில் பயன்படுத்துவது எப்படி?

போட்டோஷாப் சிஸ்3 மென்பொருளில் டவுன்லோட் செய்யப்பட்ட பிரஸ்களைப் பயன்படுத்துவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வோம்.

முதலில் டவுன்லோட் செய்யப்பட்ட .abr கோப்பு எங்குள்ளது என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

how-to-use-downloaded-brushes-in-cs3-photoshop-step-step-by-guide
போட்டோஷாப் பிரஸ் பயன்படுத்திய படம்

டவுன்லோட் செய்யப்பட்ட பிரஸ் கோப்புகளை போட்டோஷாப்பில் கொண்டு வரும் முறை:



  • போட்டோஷாப் மென்பொருளை திறக்கவும்.
  • 'B' விசையைத் தட்டவும். இப்பொழுது பிரஸ் டூல் செயல்பாட்டிற்கு வந்திருக்கும்.
  • படத்தில் உள்ளது போல மேலே இருக்கும் பிரஸ்டூல் இருக்கும் சிறிய அம்புக்குறியில் கிளிக் செய்யவும்.
  • இதுபோன்றதொரு கீழ்விரி மெனு தோன்றும்.
  • அதில் அதில் Load Brushes என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • டவுன்லோட் செய்து வைத்திருக்கும் .abr கோப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  • Load என்ற பட்டனை அழுத்துங்கள்.
  • இப்பொழுது தேர்ந்தெடுக்கபட்ட பிரஸ் ஆனது போட்டோஷாப்பில் லோட் ஆகி வந்திருக்கும். 
இதுபோன்ற ஆயிரக்கணக்கில் பிரஸ்கள் உள்ளன. தேவையானவற்றத் தரவிறக்கம் போட்டோஷாப்பில் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். தொழிற்முறை போட்டோஷாப் டிசைனர்களுக்கு இது மிகவும் பயன்படும்.

 நான் Smoke Brush என்பதை டவுன்லோட் செய்து தரவேற்றியிருக்கிறேன். கருப்பு பின்னணியில் ஸ்மோக் பிரசைப் பயன்படுத்திய படமொன்று கீழே.

 how-to-use-downloaded-brushes-in-cs3-photoshop-step-step-by-guide

நன்றி..!

Tools: cs3 brush tool, downloaded brushes, photoshop brushes, சிஎஸ்3 ல் பிரஸ்டூல், பிரஸ் டூல், how to use downloaded brush in cs 3, free photoshop brushes.

0 comments

Post a Comment