போட்டோஷாப் பொருத்தவரைக்கும் இது ஒரு முக்கியமான எளிய டூல் ஆகும்.
இந்த டூலைப் பயன்படுத்தி போட்டோவில் உங்களுக்குத் தேவையான பகுதியை மட்டும் கட் செய்து எடுத்துக்கொள்ளலாம்.
இந்த டுடோரியலில் ஒரு குளத்தின் நடுவே அமைந்துள்ள சிறு கோபுரப் பகுதியை மட்டும் கட் செய்து எடுப்பது எப்படி என்பதைக் காட்டியுள்ளேன்.
கோபுரத்தைச் சுற்றி அதிகமாக உள்ள தேவையற்ற பகுதியை வெட்டி எடுத்துள்ளேன். இவ்வாறு உங்களுக்கு வேண்டிய குறிப்பிட்ட பகுதியை மட்டும் இந்த கிராப் டூலைப் பயன்படுத்தி வெட்டி எடுத்துக்கொள்ளலாம். எப்படி என்பதை கீழ்க்கண்ட செய்முறையைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
கிராப் டூல் |
- உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தை போட்டோஷாப் மென்பொருளில் திறந்துகொள்ளுங்கள்.
- பிறகு கிராப் டூலைத் தேர்ந்தெடுங்கள்
- படத்தின் மீது உங்களுக்கு வேண்டிய பகுதியை மட்டும் தேர்ந்தெடுங்கள். இதுபோன்ற தொடர் கோடுகள் தோன்றும்.
- பிறகு Enter பட்டனை அழுத்துங்கள்.
- முடிந்தது. கிராப் டூல் மூலம் தேர்ந்தெடுத்த பகுதி மட்டும் உங்களுக்கு கிடைக்கும்.
உதாரணத்திற்கு கீழுள்ள ஒரு படத்தை கிராப் டூல் மூலம் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
இது ஒரிஜினல் படம் |
கிராப் டூல் மூலம் தேர்வு செய்யப்பட்ட பகுதியை காட்டும் படம் |
கட் செய்த பிறகு கிடைத்த இறுதிபடம் |
பதிவில் ஏதேனும் சந்தேகம் எனில் பின்னூட்டத்தில் கேட்கவும்.
நன்றி.
Tags: crop tool, using crop tool, photoshop basic, how to use crop tool in photoshop , photoshop in tamil - crop tool, uses of crop tool in photoshop in tamil, photoshop basic tutorial in tamil language, easy photoshop tutorial in tamil, how to use photoshop crop tool in easy way, simple photoshop tools, one click photoshop tips, photoshop tool using method.
good
ReplyDeletewelldone
ReplyDelete