Monday 28 October 2013

Heal Brush Tool பயன்படுத்தி பழுதடைந்த போட்டோவை சரிசெய்வது எப்படி?

Healing Tool in Photoshop

உங்களுடைய பழைய போட்டோக்களை இந்த டூல் மூலம் புதிய போட்டோக்களாக மாற்றுவது எப்படி என்பதை இந்த டுடோரியல் பாடத்தில் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.

சாதாரணமாக அந்தக் காலத்துப் பழைய கருப்பு-வெள்ளை படங்கள் வீட்டில் இருக்கும். தாத்தா பாட்டிக் காலத்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்களை பிரேம் போட்டு வைத்திருந்தாலும், அவற்றில் புழுக்கள், பூச்சிகள் போன்றவை அரித்து, அங்கும், இங்கும் சேதமடைந்து இருக்கும்.

குழந்தைகளின் கைகளில் போட்டோக்கள் கிடைத்தாலும், அவற்றை மடக்கி, கிழித்து, கீழே போட்டு தேய்த்து, சேதப்படுத்தியிருப்பார்கள். அதுபோன்ற போட்டோக்களை புதிய போட்டோக்களாக மிக எளிதில் மாற்ற முடியும்.



அதற்கு போட்டோஷாப் மென்பொருள் பயன்படுகிறது. போட்டோஷாப் மென்பொருளில் உள்ள Healing Brush Tool பயன்படுத்தி, சேதமடைந்த போட்டோக்களை மிக அழகாக, Original Photo - வைப் போன்ற புதியதாக மாற்ற முடியும்.

கீழுள்ள டுடோரியலில் கூறப்பட்டிருக்கும் படிமுறைகளை கையாள்வதன் மூலம் நீங்களும் உங்களுடைய சேதமடைந்த போட்டோக்களை புதியது மாற்றிக்கொள்ள முடியும். முயன்று பாருங்களேன்.

Healing Tool in Photoshop


போட்டோஷாப் உள்ள பயன்மிக்க டூல் இது.  Healing Brush Tool எனக்குறிப்பிடப்படும் இந்த கருவியின் மூலம் பழைய அல்லது புதிய போட்டோக்களில் உள்ள பழுதான அல்லது கீரல் விழுந்த பகுதிகளை சரி செய்யலாம்.

ஒரு போட்டோ மடங்கி இருந்ததெனில், மடங்கிப்போன இடத்தில் போட்டவில் உள்ள அச்சு அழிந்து போட்டோ உடைந்து போயிருக்கும். அல்லது கீழே விழுந்தாலும் அல்லது அங்கும் இங்கும் போட்டு வைப்பதால் போட்டோக்களின் மேற்பகுதியில் கீரல்கள் விழுந்து விடும்.

அக்காலத்தில் எடுத்த பழைய போட்டோவாக இருந்தால் சொல்லவே தேவையில்லை. உங்களது மூதாதையர்களின் புகைப்படங்கள் உங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக வைத்திருப்பதாலும் போட்டோக்கள் சேதமடைந்து, அதனுடைய உண்மையான தோற்றத்தை இழந்து பொலிவிழந்திருக்கும். 

spot  healing brush


அதுபோன்ற போட்டோக்களை சரி செய்து புதிய போட்டோவைப் போல தெள்ளத்தெளிவாக மாற்ற முடியும். அப்படி மாற்றுவதற்கு பயன்படும் ஒரு முக்கியமான Photoshop Tool தான் Healing Tool Brush. பெயருக்கு ஏற்றாற் போல் போட்டோக்களில் உள்ள சிதைவடைந்த, கீரல் விழுந்த பகுதிகளை இது சரி செய்கிறது. 

உதாரணமாக கீழுள்ள படத்தைப் பாருங்கள்.

uses-of-spot-healing-brush-tools-in-photoshop-cs3
ஒரினிஜனல் படம்
இந்த படத்தில் உள்ள கோடுள்ள பகுதியை இப்பொழுது ஹீலிங் பிரஸ்சைப் பயன்படுத்தி எப்படி சரிசெய்வது எனப் பார்ப்போம்.


How to Use Heal Brush Tool in Photoshop cs 3 - Tutorial


  • முதலில் தேவையான படத்தை போட்டோஷாப்பில் திறந்துகொள்ளவும். 
  • Ctrl+J கொடுத்து அப்படத்திற்கான டூப்ளிகேட்டை உருவாக்கிக்கொள்ளவும். 
  • ஒருஜினல் படத்தை லேயர்  பேலட்டிலிருந்து மறைத்துக்கொள்ளவும்.  மறைக்க கண் போன்றிருக்கும் படத்தின் மீது கிளிக் செய்தால் அந்த லேயர் மறைந்துவிடும்.
  • டூப்ளிகேட் லேயரை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
  • இப்பொழுது கீபோர்டில் J அழுத்தவும். J விசையானது போட்டோஷப் மென்பொருள் Healing Brush டூலை உயிர்பிக்கும். 
  • இப்பொழுது  Healing Brush தேர்வாகியிருக்கும். அல்லது நீங்களே டூல்பாரிலிருந்தும் Healing Brush தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். 
  • ஹீலிங் பிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதற்கான அமைப்பை மாற்றிக்கொள்வதற்கான துணைக்கருவில் பட்டி தோன்றியிருக்கும். அதில் ஹீலிங் பிரஸ்சின் அளவு மற்றும் Mode, Type ஆகியவை தோன்றும். 
  • இப்பொழுது நீங்கள் சரிசெய்ய வேண்டிய படத்தில் உள்ள டேமேஜ் பகுதியின் அளிவிற்கு உங்களுடைய பிரஸ் டூலின் அளவை தேர்ந்தெடுங்கள். 
  • பிரஸ் டூலின் அளவை அதிகரிக்கவும், குறைக்கவும்... [ ] இந்த விசைகள் பயன்படுகின்றன. 
  • அல்லது பிரஸ்டூலின் மீது வைத்து healing brush tool settings பெறமுடியும். 


நான் இங்குள்ள படத்தை சரிசெய்ய ஹீலிங் பிரஸ் அளவினை படத்தில் உள்ளபடி மாற்றியமைத்துள்ளேன். 

healing brush tool settings

இவ்வாறு மாற்றிய பிறகு புகைப்படத்தில் உள்ள கீரல்களின் மீது Healing Brush சை வைத்து இழுத்துக்கொண்டே வர கீரல் விழுந்த இடம், சேதமடைந்த மடங்கியப் பகுதிகள் சரிசெய்யப்பட்டுவிடும். 

நுணுக்கமாக இதைச் செய்தால் படத்தில் உள்ள டேமேஜ் பகுதிகள் அனைத்தையும்  மிகச்சரியாக சரி செய்ய முடியும். 



இறுதியாக சரிசெய்யப்பட்ட போட்டோ  


Tags: Healing Brushes, spot healing brushes, uses of healing brush, photo repair, photo repair with healing brush, healing brush uses in CS 3, CS 3 tutorial, CS 3 Tamil tutorial, photo repairing in Photoshop CS 3, photo repair in damage photo, healing brush, healing brush tools, Photoshop tools.

3 comments:

  1. முயற்சித்து பார்க்கிறேன். அருமையான தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அருமையான, எளிமையான, தெளிவான போட்டோஷாப் பாடம்... பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..

      Delete