போட்டோஷாப்பில் முக்கிய பங்கு வகிப்பவை செலக்சன் டூல்கள் (Selection Tools).
இந்த டூல்கள் போட்டோவில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளைத் தேர்ந்தெடுக்க பயன்படுகின்றன. அதனால்தான் இவற்றை Selection Tools என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த டூல்கள் போட்டோவில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளைத் தேர்ந்தெடுக்க பயன்படுகின்றன. அதனால்தான் இவற்றை Selection Tools என்று குறிப்பிடுகின்றனர்.
1. Marquee tool
2. Lasso Tool
3. Magic wand tool
இம்மூன்று வகையான செலக்சன் டூல்களில் முதலிரண்டு கருவிகளைப் பற்றியும், அதைப் பயன்படுத்தும் விதத்தையும் தெளிவாக விளக்குகிறது இப்பதிவுகள்:
How to use Magic wand tool - Tutorial
இப்பதிவில் Magic Wand tool பற்றி கற்றுக்கொள்வோம்.
மார்க்யூ டூல் மற்றும் லாசோ டூல்களைவிட Magic Wand டூல் பயன்படுத்துவது எளிதானது. இந்த டூலினைக் கொண்டு மிக எளிதாக படத்தில் உள்ள நிறங்களை தேர்வு செய்யலாம். ஒரே மாதிரியாக முழுமையாக பரவியிருக்கும் நிறங்களை இந்த மேஜிக் வாண்ட் டூல் மூலம் தேர்வு செய்யசெய்துகொள்ள முடியும். (படத்தைப் பார்க்க)
படத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு குறிப்பட்ட நிறம் மட்டும் இருக்குமாயினும் அவற்றை இந்த மேஜிக் வாண்ட் டூலினைப் பயன்படுத்தி கிளிக் செய்யும்பொழுது அந்நிறம் பரவியுள்ள பகுதி அனைத்தும் தேர்வு செய்யப்பட்டுவிடும்.
படத்தில் ஆரஞ்சு வண்ண நிறம் Select ஆகி உள்ளது. இவ்வாறு நிறத்தினையோ அல்லது படத்தின் குறிப்பிட்ட பகுதியையோ ஒரே மாதிரியான நிரங்கள் சம்மாக பரவியிருந்தால் அவற்றை தேர்ந்தெடுக்க மேஜிக் வாண்ட் டூல் பயன்படும்.
குறிப்பிட்ட பகுதியை தேர்ந்தெடுத்த பிறகு, அந்த பகுதியில் மட்டும் குறிப்பிட்ட வேலைகள் செய்துகொள்ளலாம். உதாரணமாக
குறிப்பிட்ட பகுதியை தேர்ந்தெடுத்த பிறகு, அந்த பகுதியில் மட்டும் குறிப்பிட்ட வேலைகள் செய்துகொள்ளலாம். உதாரணமாக
1. வேறு ஒரு நிறத்தை நிரப்பலாம்...
2. தேர்ந்தெடுத்தப் பகுதியை Delete செய்யலாம்.
3. தேர்ந்தெடுத்தப் பகுதியை Cut செய்யலாம்.
4. தேர்ந்தெடுத்தப் பகுதியை காப்பி செய்யலாம்.
5. தேர்ந்தெடுத்த பகுதியை வேறு ஒரு புதிய டாக்குமெண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
5. தேர்ந்தெடுத்த பகுதியை வேறு ஒரு புதிய டாக்குமெண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
இந்த டூல் படத்தில் விரவியிருக்கும் வண்ணங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு, அந்த வண்ணங்கள் பரவியிருக்கும் பகுதியை மட்டும் செலக்ட் செய்யும். நீங்கள் படத்தின் குறிப்பிட்ட நிறத்தின் மீது கிளிக் செய்து பார்த்தால் உங்களுக்கே மிக எளிதாக புரியும்.
மேஜிக் வாண்ட் டூலினை எடுத்துக்கொண்டு எந்த நிறத்தின் மீது வைத்து கிளிக் செய்கிறீர்களோ அந்த நிறம் பரவியுள்ள பகுதிகள் மட்டுமே செலக்ட் ஆகும்.
மேஜிக் வாண்ட் டூலினை எடுத்துக்கொண்டு எந்த நிறத்தின் மீது வைத்து கிளிக் செய்கிறீர்களோ அந்த நிறம் பரவியுள்ள பகுதிகள் மட்டுமே செலக்ட் ஆகும்.
Tags: photoshop cs3, selection tools, tools, போட்டோஷாப், போட்டோஷாப் கருவிகள், Magic Wand tool, photoshop selection tools
0 comments
Post a Comment