Sunday 10 November 2013

Photoshop CS3 இல் Layer களின் பயன்பாடு

போட்டோஷாப்பில் மிக முக்கிய அங்கம் வகிப்பது லேயர்கள். போட்டோஷாப் எடிட்டிங்கில் முதன்மையானதும் இதுதான். எடிட் செய்யப்பட வேண்டிய பகுதிகளை பல்வேறு லேயர்களில் வைத்து எடிட்டிங் செய்யலாம். 

Layer என்பதனை தமிழில் அடுக்கு என குறிப்பிடலாம்.. ஒவ்வொரு அடுக்காக படங்களை வைத்து ஒரே கோப்பாக உருவாக்கப் பயன்படுபவைதான் லேயர்கள்...

இந்த லேயர்களில் படங்களை வைக்கலாம்... எழுத்துக்களை உருவாக்கலாம்... ஸ்பெஷல் எபக்ட்களை உருவாக்கலாம்...

layers-in-photoshop


இப்படி என்னென்ன டிசைன்கள் வேண்டுமோ அவற்றையெல்லாம் செய்து முடிக்கலாம். 

பல்வேறு விதமான போட்டோ எஃபக்ட்களை உருவாக்கவும் முக்கியமாக பயன்படுகிறது. 

லேயர்  பேலட்டை உயிர்ப்பிக்க குறுக்கு விசை F7. அல்லது விண்டோ மெனுவில் சென்று Layers என்பதை கிளிக் செய்வதன் மூலம் லேயர் விண்டோ தோன்றும். 

இயல்பிருப்பாகவே போட்டோஷாப் தோற்றத்தில் இந்த லேயர் பேலட் காட்சியளிக்கும். 

நீங்கள் செய்யும் எடிட்டிங் வேலைகள் , டிராயிங் வேலைகள் போன்றவை அனைத்துமே இந்த லேயரில்தான் பதியப்படும். 

ஒரு சாதாரணமான புதிய போட்டோஷாப் டாக்குமெண்டைத் திறக்கும்போது ஒரே ஒரு லேயர் மட்டும் இருக்கும். 

அந்த லேயருக்கு பேக்ரவுண்டு லேயர் என்று பெயர்.. 

கூடுதலாக லேயர்கள் வேண்டுமெனில் Ctrl+Shift+N அழுத்துவதன் மூலம் பெறலாம்.. அல்லது அந்த பேலட்டில் கீழுள்ள create a new layer என்ற சிறிய பட்டனை அழுத்துவதன் மூலம் புதிய லேயரை உருவாக்க முடியும். 

பல்வேறு அடுக்குகளாக படங்களை வைத்து ஒரே படமாக மாற்ற முடியும்... 

இதுபோன்று பல்வேறு வகைகளில் லேயர்களைப் பயன்படுத்துவது பற்றியப் பாடங்களை இனி வரும் பாடங்களில் படிப்போம்... 

நன்றி..

Tags: photoshop in tamil, photoshop cs3 layers, layers in photoshop cs3


2 comments:

  1. hi Brother, நான் தற்போது தான் உங்கள் பதிவுகளை பார்த்தேன் நன்றி போட்டோ ஷாப் பதிவுகள் மிக அருமை, இப்பதிவுகளை பார்த்த பிறகு நானும் போடோ ஷாப்பை downloand பண்ண முயற்சித்தேன் ஆனால் முடியவில்லை தயவுசெய்து எப்படி down load பண்ணுவது என்பதை சற்று விளக்கமாக சொல்லுங்களேன் எனது laptop i5 வகையை சார்ந்தது

    ReplyDelete
    Replies
    1. இணையத்தில் Adobe தளம் உட்பட போட்டோஷாப் மென்பொருளைத் தரவிறக்கம் செய்வதற்கு பல்வேறு இணையதளங்கள் உள்ளன. நீங்கள் கூகிள் தேடலில் Download Photoshop எனக்கொடுத்து எந்த பதிப்பு வேண்டுமோ அதை உள்ளிட்டு தேடினால் தரவிறக்கம் செய்வதற்கு இணைப்புகள் கொண்ட தளங்கள் கிடைக்கும். அதில் நம்பகமான தளங்களா என நீங்கள் உறுதிசெய்துகொண்டு தரவிறக்கம் செய்யலாம்.

      இந்த முறையில் தரவிறக்கம் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே உங்களுடைய நண்பர்களிடம், போட்டோஷாப் மென்பொருளை கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள். அதுவே பாதுகாப்பானதும் கூட.. நன்றி.

      Delete