Thursday 14 November 2013

ஒரே நொடியில் போட்டோக்களின் பார்மட் மாற்றுவதற்கு பயன்படும் இணையதளம்

நாம் கம்ப்யூட்டரில் பார்க்கும் போட்டோக்கள், இணையதளங்களில் பார்க்கும் போட்டோக்கள் அனைத்தும் ஒவ்வொரு பார்மட்டில் இருக்கும். பெரும்பாலும் அவைகள் .jpg அல்லது .gif அல்லது .png பார்மட்டில் இருக்கும். 

இமேஜ் பார்மட்கள் நிறைய உள்ளன. இணையத்தில் பார்க்கும் படங்கள் அனைத்துமே ஒரே பார்மட்டில் இருப்பதில்லை. உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைல்கள் ஒரு சில பார்மட்டில் உள்ள படங்களை டிஸ்பிளே செய்யாது. அதற்கு நீங்கள் அந்த இமேஜ்கள் உங்களுடைய சாதனங்கள் சப்போர்ட் செய்யும் பார்மட்டிற்கு மாற்ற வேண்டும்.

அவ்வாறான சமயங்களில் Photoshop மென்பொருள் இருந்தால் அதைப் பயன்படுத்தி தேவையான பார்மட்டிற்கு கன்வர்ட் செய்து பயன்படுத்தலாம். 


போட்டோஷாப் மென்பொருள் மூலம் .png, .jpg, மற்றும் .gif போன்ற ஒரு சில பார்மட்களில் மட்டுமே இமேஜ்களை மாற்றக்கூடிய வசதி உள்ளது.

இமேஜ் வகைகளில் நூற்றுக்கும் அதிகமான போட்டோ பார்மட்கள் (Hundreds of photo formats)  உள்ளதால், போட்டோஷாப்பின் மூலம் தேவையான பார்மட்டிற்கு மாற்றுவதற்கான வசதிகள் இல்லை. 


அந்த வகையான படங்களை உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைல்கள் சப்போர்ட் செய்யும் படங்களாக மாற்ற வேண்டும் எனில் போட்டோஷாப்பை நம்பி பயனில்லை. 

இதுபோன்ற சூழலில் நமக்கு உதவுபவைதான் ஆன்லைன் போட்டோ கன்வர்ட்டர் தளங்கள் (Online Photo converter Websites). இத்தகைய தளங்களின் மூலம் ஒரே நூற்றுக்கும் அதிகமான பார்மட்களில் படங்களை மாற்றிக்கொள்ளலாம். 

உதாரணமாக, 

IMG to JPEG, PSD to JPEG, CR2 to JPEG, NEF to JPEG, BMP to JPEG 2000, JPEG to EPS, EPS to JPEG, JPEG to GIF, JPEG to BMP, GIF to JPEG, BMP to JPEG, TIFF to JPEG, RAW to JPEG, JPEG to PNG, PNG to JPEG, PNG to JNG, JPG to PNG, JPEG to PDF போன்று  ஒரு பார்மட்டிலிருந்து மற்றொரு பார்மட்டிற்கு மிக எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்.

அந்த வகையில் போட்டோக்களை கர்வர்ட் செய்ய பயன்படும் ஒரு பயன்மிக்க இணையதளம்  கோ டூ கன்வர்டர் (Go to Converter). 

இத்தளத்தின் மூலம் உங்களுக்கு வேண்டிய படங்கள் மற்றும் போட்டோக்களை உங்கள் தேவைக்கேற்றார்போல பைல் பார்மட் மாற்றிக்கொள்ள முடியும். 

கூடுதல் வசதியாக படத்தின் தரம் மற்றும் படத்தின் அளவுகள் (Quality, Size) ஆகியவற்றையும் மாற்ற முடியும். 

போட்டோக்களின் பார்மட் மற்றும் அளவை மாற்றும் முறை: 


  • முதலில் தளத்திற்கு செல்லுங்கள். 
  • தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள Upload File அல்லது Download From URL  என்பதனைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கு வேண்டிய படத்தினை தெரிவு செய்யவும். 
  • பிறகு அப்லோட் என்ற பட்டனை கிளிக் படத்தினை தளத்தின் சர்வரில் தரவேற்றவும். 
  • பிறகு உங்களுடைய படம் என்ன பார்மட் என்பதை உணர்ந்து Convert to (image format) to என்ற தலைப்பின் கீழ் உங்களுக்கு வேண்டிய பார்மட்டைத் தேர்ந்தெடுக்க ஆப்சனைக் காட்டும். 
  • அதில் நீங்கள் விருப்பபடும் பார்மட்டினை தேர்ந்தெடுக்கவும். 
  • பிறகு தேவையெனில் Resize என்பதில் டிக்மார்க் ஏற்படுத்திக்கொண்டு, அதில் உள்ள ஏதேனும் ஒரு அளவினைத் தேர்ந்தெடுக்கலாம். 
  • அடுத்து கீழுள்ள image quality ஆப்சனில் உங்களுக்குத் தேவையான இமேஜ் குவாலிட்டியைத் தேர்ந்தெடுக்கலாம். 
  • இறுதியாக கன்வர்ட் என்ற பட்டனை அழுத்துவதன் மூலமாக, நீங்கள் விரும்பிய பார்மட்டிற்கு படம் மாற்றப்பட்டு, அதைத் தரவிறக்குவதற்கான Download link  கிடைக்கும். 
  • அந்த லிங்கை கிளிக் செய்து பார்மட் மாற்றப்பட்ட படத்தின் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். 
  • இந்த லிங்க் ஆனது தொடர்ந்து இரண்டு நாட்கள் அத்தளத்தில் தரவிறக்கம் செய்து கிடைக்கும். இரண்டு நாட்களுக்குப் பிறகு படத்தினை தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு இணையதளத்திலிருந்து தானாக நீங்கிவிடும். 
நன்றி. 

Tags: image converter, online tool, photo converter, photo converter tool online, free online photo format converter tool, free image converter online, easy photo converter tool online, online photo re-sizer, online photo re-sizer tool, photo format converter, image format converter tool, free online software for image format converting work. image converter, online tool, photo converter, photo converter tool online, free online photo format converter tool, photo converter.

1 comments:

  1. நல்லதொரு இணையத்தினை அறிமுகம் செய்ததற்கு நன்றி ஈரோடு ஹபீபுர் ரஹ்மான்

    ReplyDelete