Thursday 5 December 2013

Photoshop CS3 ல் Free Transform Tool பயன்படுத்துவது எப்படி?

Free Transform: 

போட்டோஷாப்பில் இது ஒரு முக்கியமான கட்டளை ஆகும். இந்த கட்டளையில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி உங்களது போட்டோக்களை பல்வேறு அளவுகளில் சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ மாற்றிக்கொள்ள இயலும்.

இதில் பல்வேறு வசதிகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி, ஒரு போட்டோவை

how-to-use-free-transform-tool-in-photoshop-cs3-tamil-video-tutorial

  • அளவினை மாற்றலாம். 
  • வேண்டிய கோண அளவுகளில் படத்தினை திருப்ப முடியும். 
  • சாய்வுப் படங்களை அமைக்கலாம். 
  • படத்தின் நடுப்பகுதி, நான்கு பக்க முனைகளில் மாற்றங்களை செய்ய முடியும். 
  • அந்த முனைகளை மேலாகவோ அல்லது கீழாகவோ, இடமாகவோ அல்லது வலமாகவோ இழுத்து அவற்றை புதிய வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும். 
மேற்குறிப்பிட்ட மாற்றங்களைச் செய்யப்  பயன்படும் கட்டளைகள்:

1. Rotate
2. Skew
3. distort
4. Rotate 180
5. Perspective
6. Rotate 90 CW
7. Rotate 90 CCW
8. Flip Horizontal
9. Flip vertical

மேற்கண்ட கட்டளைகள் மூலம் நீங்கள் உங்களது போட்டோவை அல்லது லேயர்களில் உள்ள டிசைன்களை, வரைந்த படங்களை வேண்டிய திசைகளில் , வேண்டிய கோணங்களில்  சாய்வாக அல்லது நேராகவோ அல்லது கூம்பு வடிவிலோ, கிடைமட்ட வடிவிலோ மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.

வேண்டிய கோணங்களில் திருப்பி வைத்துக்கொள்ள முடியும்.

மேலதிக விபரங்களுக்கு இந்த வீடியோவைப் பார்க்கவும்.



நன்றி.

Tags: photoshop cs3 tutorial, photoshop tutorial in tamil, photoshop tools, use of free transform tool photoshop tutorial in tamil.

3 comments:

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_6.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete