Friday 6 December 2013

போட்டோஷாப் சிஎஸ் 3 ல் லேயர்களின் பணி மற்றும் முக்கியத்துவம்

This post explains about photoshop's layers, and how to works on, how to design on separate layer and specs of photoshop layers and more. 

ஒரு கட்டிடம் கட்டுவதற்கு எப்படி அடிப்படை தேவையோ, அதுபோல போட்டோஷாப்பில் டிசைனிங் செய்ய அடிப்படையாக அமைவது லேயர்கள். 

கட்டிடத்திற்கு அஸ்திவாரம் அமைவது போல, போட்டோஷாப்பில் Background Layer மற்றும் அதைத்தொடர்ந்து உருவாக்கப்படும் லேயர்கள் அமைந்திருக்கும்.

சுருக்கமாகச் சொல்வதெனில் ஒரு முழுமையான போட்டோ டிசைனிங் செய்து முடிக்க அடிப்படை ஆதாரமாக இருப்பவை லேயர்கள்தான்.

ஏனெனில் போட்டோஷாப்பில் செய்யும் ஒவ்வொரு வேலையும் (Text, Masking, coloring, brushing, erasing,) என்பன போன்ற அனைத்தும் லேயர்களிலேயே பதியப்படுகிறது. 

அவ்வாறு  செய்து முடித்த பிறகு உருவாவதுதான் இறுதியான போட்டோ வடிவம்.  

how-to-work-on-layers-in-photoshop-cs3


போட்டோஷாப்பில் செய்யும் ஒவ்வொரு வேலையும் லேயர்களில்தான் பதிவாகிறது.  செய்யும் சிறிய சிறிய வேலைகளையும் புதிய லேயர்களை உருவாக்கி, அதில் செய்யும்பொழுது, ஒரிஜினல் படத்தில் எந்த ஒரு சேதமும் ஏற்படுவதில்லை.

செய்த மாற்றங்கள் தேவையில்லை எனில் அந்த லேயரை மட்டும் டெலீட் செய்துவிடலாம். அல்லது Hide செய்துவிட முடியும்.

ஒவ்வொரு குறிப்பிட்ட லேயர்களிலும் (Specific layers) சிறிய சிறிய வேலைகளாக அல்லது டிசைன்களை செய்யும்பொழுது, அவற்றை கையாள்வதும் எளிதாக இருக்கும். 

போட்டோஷாப் டாக்குமெண்டில் தேவையான படத்தினை அல்லது டிசைனை உருவாக்கி முடித்த பிறகும் அவற்றில் ஏதேனும் மாறுதல்கள் வேண்டுமெனில், எந்த லேயரில் மாற்றம் செய்ய வேண்டுமோ அதை மட்டும் எடிட் செய்தால் போதுமானது. மற்ற லேயர்களில் உள்ள படங்கள்,  எழுத்துகள், டிசைன்கள் அனைத்தும் அப்படியே இருக்கும். 

உதாரணமாக ஒரு டெக்ஸ்ட் லேயர் ஒன்றில் (Text layer) உள்ள எழுத்துக்களை மற்றும் மாற்ற வேண்டும் எனில், அந்த லேயரை மட்டும் கிளிக் செய்து, அதில் தேவையான மற்றங்களைச் செய்துவிட முடியும்.

பேக்ரவுண்ட் லேயரில் மட்டும் மாற்றம் செய்ய வேண்டுமெனில் அந்த லேயரை கிளிக் செய்து தேர்ந்தெடுத்து வேண்டிய மாற்றங்களை செய்துகொள்ளலாம்.

எளிதாக சொல்வதெனில் ஒரு போட்டோஷாப் டாக்குமெண்டில் ஐந்து லேயர்கள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் இரண்டாம் லேயரில் நீங்கள் செய்த டிசைனில் மட்டும் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் எனில் அந்த லேயரை மட்டும் தேர்ந்தெடுத்து, அதில் வேண்டிய மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். 

ஒரு போட்டோஷாப் டாகுமெண்ட் இறுதி வடிவத்தினைப் பெறுவதற்கு லேயர்கள் அடிப்படையாக இருப்பதுடன், அதுவே அந்த போட்டோ டிசைனையும், இறுதி வடிவத்தையும் கொடுக்கிறது.

நீங்கள் இன்டர்நெட்டில் பார்க்கும் ஒவ்வொரு Wallpaper, வாழ்த்து அட்டைகளும் இவ்வாறு லேயர்களாகப் பிரிக்கப்பட்டு உருவாக்கப்படு, இறுதியாக ஒரு ஒன்றிணைந்த படமாக மாற்றபட்டு கிடைக்கிறது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடியும்.


Photoshop Layer கள் பற்றி விரிவாக அறிந்துகொள்ள கீழுள்ள பதிவு பயன்படும். 



Tags: Tool, Layers, photoshop cs3, cs3 tutorial in tamil, tamil photoshop tutorial, working on layers.


0 comments

Post a Comment