Friday 9 May 2014

போட்டோஷாப்பில் Reflection Effect [வீடியோ டுடோரியல்]

போட்டோஷாப்பில் Reflection Effect கொண்டுவருவது எப்படி என்பதை இந்த டுடோரியலில் பார்க்க விருக்கிறோம். தண்ணீரில் Reflection உடன் உள்ள படங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். சில படங்களுக்கு தண்ணீரில் இருப்பது போன்று ரெஃப்ளக்சன் எஃபக்ட் கொடுத்தால் அழகாக இருக்கும்.

அந்த வகையில் ஒரு போட்டோவிற்கு Reflection Effect கொடுக்கும் வழிமுறைகளை இப்பதிவில் தெரிந்துகொள்வோம். பதிவை முழுமையாக படித்த பிறகு, கீழுள்ள வீடியோவைப் பார்த்தால் போட்டோஷாப்பில் நீங்கள் இந்த எபக்டை செய்து பார்க்க மிக எளிதாக இருக்கும்.
reflection-effect-in-photoshop-cs3
சாதாரண படம்
reflection-effect-in-photoshop-cs3
ரெஃப்ளக்சன் எபக்ட் கொடுத்த பிறகு

போட்டோஷாப்பில் Reflection Effect கொண்டுவரும் வழிமுறைகள்: 

  • முதலில் PhotoShop திறந்துகொள்ளுங்கள்.
  • அதில் தேவையான படத்தை திறந்துகொள்ளுங்கள்.
  • படத்தில் எந்த பகுதி ரெஃப்ளக்ட் ஆக வேண்டுமோ அப்பகுதியை Marquee Selection Tool மூலம் தேர்ந்தெடுக்கவும்.
  • தேர்ந்தெடுத்தப் பகுதியை நகலெடுக்க CTRL+C அழுத்தவும்.
  • இப்பொழுது மார்க்யூ டூலால் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி காப்பி செய்யப்பட்டிருக்கும்.
  • அடுத்து CTRL+V கொடுக்கவும்.
  • தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மட்டும் புதிய லேயரில் பேஸ்ட் ஆகும். 
  • அதை Transform Tool கொண்டு தேர்ந்தெடுக்கவும். அல்லது CTRL+T கொடுக்கவும்
  • இப்பொழுது பேஸ்ட் ஆகிய புதிய லேயரில் உள்ள பகுதிக்கு Transform Tool அப்ளை ஆகியிருக்கும். 
  • அதன் மீது ரைட் கிளிக் செய்து தோன்றும் பெட்டியில் Flip Vertical என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
  • இப்பொழுது அந்த லேயரில் உள்ளதும் மட்டும் தலைகீழாக மாறியிருக்கும். 
  • அதை ரெப்ளக்ட் தோன்ற வேண்டிய இடத்திற்கு கீழே நகர்த்தவும். (தண்ணீரின் மேலே கவர் ஆகுமாறு வைக்கவும்)
  • இப்பொழுது அந்த புதிய லேயரில் தேர்ந்தெடுத்து, Opacity -யை 100% லிருந்து, 40% மாக குறைக்கவும். 
  • அவ்வளவுதான். உங்களுடைய படத்திற்கு அருமையான ரெஃப்ளக்சன் எஃபக்ட் கிடைத்திருக்கும். 
இந்த வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கு மிக எளிதாக விளங்கும்.


பதிவில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் பின்னூட்டமிடவும்.

நன்றி.

Tags: Reflection Effect, Photoshop cs3 Tutorial, Water refelections, PHotoshop Tamil video tutorial.
-தங்கம்பழனி

0 comments

Post a Comment