Thursday 13 February 2014

டிஜிட்டல் கேமராக்களில் EXIF information, EXIP Data குறித்த விளக்கங்கள்


டிஜிட்டல் கேமராக்களைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட படங்களை கணினியில் கையாளும்பொழுது, அதில் EXIF information, EXIF Data (எக்சிப் இன்பர்மேசன் , எக்சிப் டேட்டா) போன்றவற்றை பார்த்திருப்பீர்கள்.

EXIF  என்பது Exchangeable Image file Format என்பதன் சுருக்கம் ஆகும்.

இதன் சாராம்சம் என்னவெனில், டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்படும் படம் மற்றும் ஒலி கோப்பு தொடர்புடைய தகவல்களை பெற முடியும். அதாவது அக்கோப்புகளை தயாரிக்கப் பயன்படுத்திய சாதனங்களின் செட்டிங்ஸ்கள் மற்றும் தொடர்புடைய விடயங்களையும் அக்கோப்புடன் சேர்த்து சேமிப்பதே EXIF நுட்பத்தின் சாராம்சம் ஆகும்.
information-of-exif-data-in-digital-camera

சுருக்கமாக சொல்வதெனில் ஒரு டிஜிட்டல் கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட படத்தினுடைய EXIF தகவல்களைப் பார்த்து, அந்த படம் எந்த வகையான கேமராவின் மூலம் எடுக்கப்பட்டது, காமிரா மாடல் என்ன, அதில் அமைக்கப்படிருந்த Settingsகள் போன்ற தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.

இத்தகைய தகவல்களால் என்ன பயன்?


இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் படங்களை மேலான்மை செய்ய முடியும். படங்களை மேலாண்மை செய்வதற்கு Photos management Software கள் பயன்படும். உதாரணமாக பிகாசா, டிஜிகேம்,  போன்ற மென்பொருட்களைக் குறிப்பிடலாம்.

இத்தகைய மென்பொருட்கள் உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து வைத்துள்ள படங்களை தேதி வாரியாக, மாதவாரியாக, வருட வாரியாக அடுக்கி வைப்பதற்கு இந்த தகவல்கள் (Exif Data) பயன்படுகிறது.

அது மட்டுமல்லாமல், ஒரு நாளில் ஒரு டிஜிட்டல் கேமாராவில் பல்வேறு தரபட்ட செட்டிங்குகளில், பல்வேறு படங்களை எடுத்திடும்பொழுது, எந்தெந்த படத்திற்கு என்னென்ன செட்டிங்ஸ்கள் பயன்படுத்தபட்டது என்பது தெரியாது.

இந்த எக்ஸ்சிப் டேட்டா மூலம் ஒவ்வொரு படத்திற்கும் பயன்படுத்தபட்ட செட்டிங்ஸ்களை தெரிந்துகொள்ள முடியும். இதனால் ஒரு படத்தினைப் போன்ற தரத்துடன் மற்றுமொரு படம் எடுக்க அந்த தகவல்கள் பயன்படும்.

ஒரு போட்டோவின் EXIF Data வைப் பார்க்க  போட்டோ மேனேன்மென்ட் மென்பொருளில் அந்த போட்டோவினைத் திறந்து  அப்படத்திற்கான எக்சிப் தகவல்களைக் காணமுடியும்.

விண்டோஸ் கணினிகளில் படத்தின் மீது ரைக் கிளிக் செய்து Properties சென்றும் படத்தைப் பற்றிய தகவல்களைப் பெற முடியும்.

நன்றி.

Happy Friendship Day 2014 pics

Tags: Photo, EXIF, EXIF Data, EXIF information, Digital camera, camera, Photo management, Photo management software.

0 comments

Post a Comment