Features of Photoshop CS3
கேமிரா மூலம் நாம் எடுக்கும் புகைப் படங்கள், இதற்கு முன்பு எடுத்து கணனியில் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள், இணையத்தில் டவுன்லோட் செய்த புகைப்படங்கள் என எத்தனைய படங்களையும் Photoshop Software மூலம் நமக்குப் பிடித்தமான வகைகளில் Design மற்றும் Edit செய்து கொள்ளலாம். இதற்கு Photoshop மென்பொருளில் உள்ள பல்வேறு கருவிகள் (Tools) பயன்படுகின்றன.
இதில் இருக்கும் கருவிகள் மற்றும் நுட்பங்களை கற்றுத் தேர்ந்தால் , இதன் மூலம் சுயதொழில் செய்து முன்னேறவும் வாய்ப்புகள் உள்ளது. இம்மென்பொருளைக் கொண்டு பல்வேறு Photo Effects களை உருவாக்கலாம்..
உதாரணத்திற்கு, சுருக்கமான தோல்களைக் கொண்ட வயதானவர்களின் போட்டோவை இளமையாக , தோல் சுருக்கமின்றி சாப்ட் ஸ்கின்னாக மாற்ற முடியும்.. நரை முடிகொண்டவர்களின் போட்டோவை, கருமை நிற முடிகளாக மாற்றி பொலிவூட்டலாம்.
கருப்பு வெள்ளைப் புகைப்படத்தை வண்ணப்படங்களாக மாற்றலாம்.. பழைய செல்லரித்த போட்டோக்களை புதுப்பொலிவூட்டலாம். போட்டோவின் பின்னணியை(background) மாற்றலாம்.
படத்தின் மீது பல்வேறு விதமான எழுத்து வகைகளை கொண்டு வரலாம். கீரல் விழுந்த பழைய புகைப்படங்களை ரிப்பேர் செய்து புத்தம் புதிய போட்டோவாக மாற்றலாம்..
இல்லாத ஒன்றை இருக்கும்படி காட்டலாம்.. திடீரென அமெரிக்காவிலுள்ள ஏர்போர்ட்டில் நின்றவாறு உங்களுக்கு பிடித்த நடிகரிடம் கைகுலுக்குவதைப் போல Graphics செய்யலாம்..
இதுபோன்று போட்டோஷாப் மென்பொருளைப் பயன்படுத்தி புகைப்படங்களுக்கு பல வகையான கிராபிக்ஸ் மற்றும் Design வேலைகள் செய்யலாம்...விளம்பர படங்கள் உருவாக்கலாம்...
உங்களுக்கு கற்பனைத் திறன் இருப்பின், புதிய உருவங்களை போட்டோஷாப்பிலேயே வரையலாம். ஏற்கவே இருக்கும் படங்களை புதிய வடிவத்திற்கு மாற்றலாம்...சாதாரண படங்களை ஓவியப்படங்களாக மாற்றலாம்..
முதுமையான தோற்றமுடைய போட்டோக்களை இளமையான தோற்றமுள்ளவராக மாற்றலாம்... இப்படி நிறைய உள்ளன.. இந்த வலைத்தளத்தின் மூலம் போட்டோஷாப் அடிப்படைப் பாடங்கள், கிராபிக்ஸ் செய்யவதற்கான அடிப்படைகள் போன்றவற்றை கற்றுக்கொள்ள முடியும்.
0 comments
Post a Comment