Tuesday, 25 October 2011

உங்கள் படத்திற்கு பேக்ரவுண்ட் மாற்றுவது எப்படி?

உங்கள் படத்திற்கு நல்ல பேக்ரவுண்ட் அமைப்பது எப்படி?.  நீங்கள் சீனப் பெருஞ்சுவரைப் பார்த்திருக்கிறீர்களா? அங்கு சென்றிருக்கிறீர்களா?  அதன்மீது நீங்கள் நின்று கொண்டிருப்பதைப் போல மாற்றலாம். 

ஒரு அருமையான பச்சைப் பசேலென இருக்கும் Green Park போன்ற படத்தைப் பார்க்கிறீர்கள். அங்கு நாம் மட்டும் தனியாக இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் கற்பனையை நிஜமாக்குகிறது இந்தப் பதிவு.

நீங்கள் இதுவரை கூட போகாத முடியாத சுற்றுலாத் தளங்களில் நின்று கொண்டிருப்பதைப் போல மாற்றமுடியும். இது மிகவும் சுலபமான ஒன்றுதான்.

முதலில் உங்களுக்குத் தேவையான படத்தை போட்டோஷாப்பில் திறந்து கொள்ளுங்கள்..!!


போட்டோஷாப்பில் போட்டோவை திறக்க (ஷார்ட்கட்) - குறுக்குவிசை Ctrl+O கொடுத்தும் வேண்டிய படத்தை தேர்வு செய்து திறந்துகொள்ளலாம்.

நான் இந்த படத்தை பின்னணியாக வைக்கப்போகிறேன்.

பின்னணி படம் 

பிறகு உங்கள் படத்தை புதிதாக ஒரு விண்டோவில்  திறந்து கொள்ளவும். லேசோ டூலைக் கொண்டு எந்த படத்தை செலக்ட் செய்யவும்.

நடிகையின் படம்

லேசோ டூலை செலக்ட் செய்ய உங்கள் கீபோர்ட் "L" அழுத்தவும்.

உங்கள் புகைப்படத்தை மட்டும் செலக்ட் செய்து கொள்ளுங்கள்.  புகைப்படத்தில் தேவையான பகுதியை செலக்ட் செய்ய

Lasso Tool பயன்படுத்துவது எப்படி?  என்ற பதிவைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.



அதாவது இந்த படத்தில் இருப்பதைப் போன்று அந்த நடிகையின் படத்தை இந்த பார்க்கிற்கு கொண்டு வரப் போகிறோம். 


சரியாக உங்கள் உருவத்தை மட்டும் தேர்ந்தெடுத்து உங்களுக்கு விருப்பமான படத்தை பின்னணி படத்தின் முன் கொண்டு வந்து விடுங்கள். 

நான் நடிகையின் படத்தை லேசா டூல் மூலம் செலக் செய்து முடித்த போது 



இவ்வாறு தேர்வு செய்து முடித்தவுன் தொடர் கோட்டுவரிகளால் மின்னும். தேர்வு செய்த புகைப்படத்தை copy செய்து , ஏற்கனவே பின்னணி படமுள்ள கோப்பிற்கு சென்று (Ctrl+V) கொடுங்கள். இப்போது உங்கள் படம் அழகான பிண்ணனியில் காட்சியளிக்கும்..!! அவ்வளவுதான்..!!!

இனி நீங்கள் விரும்பும் இடத்தில் உங்கள் படத்தை வைத்து மகிழலாம். இந்தியாவில் மட்டும் உலகத்தில் உள்ள இடங்களில் எல்லாம் உங்கள் புகைப்படம் இருக்கும்படி வைத்துக்கொள்ளலாம்.


பிண்ணனி மாற்றியபிறகு வந்த படம்.


ஒப்பு நோக்க இரண்டு படங்களும் உங்களுக்கு:


பின்னணி இல்லாத நடிகையின் படம்
அழகான பிண்ணனி மாற்றியபிறகு வந்த படம்.
after selection image with new background
என்ன நண்பர்களே பதிவு பிடித்திருக்கிறதா? அப்படியெனில் தயங்காமல் பின்னூட்டமிடுங்கள்..! பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தாராளமாக என்னிடம் கேட்கலாம்.. உங்களுக்கு உதவ காத்திருக்கிறேன். அதே போல் பதிவில் ஏதாவது விடுப்பட்டாலும் தயங்காமல் குறிப்பிட்டுச் சொல்லுங்கள்.!! நன்றி நண்பர்களே.. !! அடுத்த பதிவில் சந்திப்போம்..!!

6 comments: