Tuesday 25 October 2011

Lasso Tool பயன்படுத்துவது எப்படி?

முதலில் உங்களுக்குத் தேவையான புகைப்படத்தை போட்டோஷாப்பில் திறந்து கொள்ளுங்கள்.

லாசோ டூலைத் தேர்ந்தெடுக்க உங்கள் கீ போர்டில் "L" அழுத்துங்கள்.
அல்லது  மௌசை கொண்டு லாசோ டூலை தேர்வு செய்யுங்கள்.

நான் ஒரு நடிகையின் புகைப்படத்தைத் திறந்திருக்கிறேன். இதில் நடிகையின் படம் மட்டும் எனக்கு வேண்டும். அதனால் லாசோ டூலை இப்படத்தில் பயன்படுத்தப் போகிறேன்.


இது ஒரிஜினல் புகைப்படம்


நான் இந்த நடிகையின் உருவத்தை தனியாக பிரித்தெடுப்பதற்கு இந்த லேசோ டூலைப் பயன்படுத்திக்கொண்டுள்ளேன். முகத்தாடையிலிருந்து ஆரம்பித்து மீண்டும் அங்கேயே முடிக்க வேண்டும். அதாவது லேசோ டூலை எங்கு வைத்து கிளிக் செய்கிறோமோ அங்கேயே வந்து முடிக்க வேண்டும். அப்போது லாசோ டூலால் நாம் தேர்வு செய்த பகுதி தேர்ந்தெடுக்கப்படும்.

selecting photos with Lasso tool
Lasso Tool பயன்படுத்தி நமக்கு வேண்டிய உருவத்தை தெரிவு செய்யும் படம்.


முழுவதும் தேர்ந்தெடுத்ததப் பின்






தேர்ந்தெடுத்த பகுதியை காப்பி (CTRL+C) செய்து கொண்டு வேறொரு புதிய கோப்பு ஒன்று திறந்து அதில் ஒட்டிக் கொள்ளலாம் (CTRL+V)அதை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது வேறொரு படத்தில் ஒட்டிக்கொள்ளலாம். 

புதிய கோப்பு திறக்க: 

1. File==>New கொடுங்கள்.
2. அல்லது CTRL+N அழுத்தி புதிய கோப்பொன்றை எளிதாக திறக்கலாம்.

தேர்வு செய்த உருவத்தை காப்பி செய்து , முற்றிலும் புதிய கோப்பில் திறந்து வெள்ளை நிற பின்னணியில் ஒட்டிய படம்.


இது ஒரிஜினல் புகைப்படம்





after selection image with new background
(வெள்ளைநிற -Background-ல்) கொண்டுவரப்பட்ட படம்.

வண்ணப் பின்னணியில்

இப்பதிவின் லாசோ டூலின் பயன்பாட்டை முழுவதும் அறிந்துகொண்டோம். அடுத்தப் பதிவில் ஒரு வித்தியாசமான, பயன்பாடுமிக்க பதிவொன்றைக் காணலாம்.. உங்கள் புகைப்படங்களின் பேக்ரவுண்டை மாற்றுவது எப்படி?

Tags: lasso tool, Uses of Lasso Tool.

4 comments:

  1. லாசோ டூலை பயன்படுத்துவதில் சிரமமா இருக்கு... (இமேஜை செல்க்ட் செய்வதில்)

    ReplyDelete
    Replies
    1. முதலில் பயன்படுத்துவது சிரமமாகவே இருக்கும். தொடர்ந்து பயிற்சி செய்தால் சரியான முறையில் பயன்படுத்த முடியும். தொடர்ச்சியாக அந்த டூலைப் பயன்படுத்துங்கள். விரைவிலேயே உங்களது விருப்பம்போல செலக்சனை முடிக்கலாம். நன்றி.

      Delete
  2. உங்களது பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

    ReplyDelete