Thursday 26 September 2013

போட்டோசாப்பில் Screenshot மற்றும் Editing

Screen Shot: ஸ்கிரீன் சாட் என்பது கம்ப்யூட்டர் திரையில் உள்ள காட்சியை அப்படியே படம் பிடிப்பது ஆகும். 

கம்ப்யூட்டரில் உங்களுக்கு வேண்டிய காட்சியை திறந்துகொண்டு Print Screen என்ற பட்டனை அமுக்கி ஸ்கிரீன் சாட் எடுக்கலாம்.  (ஒரு முறை பிரிண்ட் ஸ்கிரீன் அழுத்தினாலே தானாகவே கணினியின் கிளிப் போர்டில் திரைக்காட்சி பதிந்துவிடும். இது நமது கண்ணுக்குத் தெரியாது.)

எடுக்கப்பட்ட ஸ்கிரீன் சாட்டை போட்டோஷாப் மென்பொருளில் திறந்து அதை எப்படி பயன்படுத்துவது எப்படி என்பதைப் பார்ப்போம். 

முதலில் உங்களுக்கு வேண்டிய கணினித் திரைக்காட்சியை Print Screen பட்டனை அழுத்தி எடுத்துக்கொள்ளுங்கள்.

screen-shot-editing-in-photoshop-cs3




  • பிறகு போட்டோஷாப் மென்பொருளைத் திறந்துகொண்டு File=New கொடுங்கள். (அல்லது Ctrl+N)
  • இப்போது புதிய போட்டோசாப் டாக்குமெண்ட் ஓப்பன் ஆகும். Ok மட்டும் கொடுத்து வெறும் டாக்குமெண்டை திறந்துகொள்ளுங்கள்.
  • பிறகு Ctrl+V கொடுங்கள். 
  • நீங்கள் பிரிண்ட் ஸ்கிரீன் கொடுத்த பகுதி அப்படியே போட்டோஸாப் டாக்குமெண்டில் ஒட்டியிருக்கும். 
  • இப்போது கடந்த பதிவில் குறிப்பிட்ட Crop Tool பயன்படுத்தி, என்டர் கொடுத்து  வேண்டிய பகுதியை சேமித்துக்கொள்ளலாம்.


படத்தை சேமிக்க: 

 File=>Save for Web & Devices என்பதைக் கொடுத்து, வேண்டிய பார்மட்டிற்கு (.jpg, .png, .gif)சேமித்துக்கொள்ளலாம்.  
     
அல்லது 

CTRL+ALT+SHIFT+S அழுத்தியும் படத்தை வேண்டிய பார்மட்டில் சேமித்துக்கொள்ளலாம். 

நன்றி. 

என்ன நண்பர்களே..! இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா? உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்களேன்...புதியதாக போட்டோஷாப் கற்க நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த பதிவு பயன்படும்.. நீங்களும் உங்களுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..

பதிவில் ஏதேனும் சந்தேகம் எனில் பின்னூட்டம் இடுங்கள்.. 

Tags: photoshop, screen shot, how to make screen in photoshop, how to edit screen shot picture in photoshop, how to save computer screen shot via photos, how to edit screen shot picture in photoshop, how to make screen in photoshop, how to save computer screen shot via photos, photoshop, screen shot.

2 comments:

  1. நல்ல தகவல். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  2. சகோ! உங்களது பணிகள் மெம்மேலும் முன்னேற எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete