Friday 15 November 2013

போட்டோசாப்பில் Border Effect கொடுக்க [Video Tutorial Inside]

வணக்கம் நண்பர்களே..!

போட்டோஷாப்பில் படங்களுக்கு பல வகைகளில் பார்டர் அமைக்கலாம். எத்தனையோ முறைகள் உண்டு. 

இந்த பாடத்தில் எளிமையான படங்களுக்கு பார்டர் எஃபக்ட் கொடுப்பது எப்படி என்பதைப் பாப்போம். 

முதலில் தேவையான படத்தை Photoshop CS3 மென்பொருளில் திறந்துகொள்ளுங்கள். 

border-effect-in-cs3-photoshop



  • அடுத்து புதிய லேயர் ஒன்றினை உருவாக்கிடுங்கள்.. (Ctrl+Shift+N)
  • அதை வெண்மை நிறத்தில் நிரப்பவும். (இதற்கு உங்களுக்கு Fill கட்டளை உதவும். அல்லது Shift+F5 குறுக்கு விசைப் பயன்படும். 
  • தோன்றும் விண்டோவில் white என்பதை தேர்ந்தெடுத்தால் லேயர் முழுவதும் வெண்மை நிறத்தில் நிரம்பிவிடும். 
  • இப்பொழுது ரெக்டேங்குலர் டூலைப் பயன்படுத்தி, படத்திற்கு வேண்டிய பார்டரை வரைந்துகொள்ளுங்கள். 
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி முழுவதையும் கருப்பு நிறத்தில் நிரப்பிக்கொள்ளுங்கள். (இதற்கும் Fill கட்டளைப் பயன்படும்). அல்லது பக்கெட் டூலைப் பயன்படுத்தியும் வண்ணத்தை நிரப்பலாம். 
  • இப்பொழுது நாம் செலக்ட் செய்த பகுதி அப்படியே இருக்கும். அதை நீக்க Ctrl+D கொடுக்கவும். 
  • பிறகு அந்த லேயரை ஸ்மார்ட் ஆப்ஜெக்ட்டாக மாற்றிக்கொள்ளவும். ஸ்மார்ட் ஆப்ஜெக்ட் ஆக மாற்றுவதற்கு லேயரின் மீது ரைட் கிளிக் செய்து Smart Object  என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். 
  • பிறகு ஃபில்டர் மெனு சென்று, Gussian Blur என்பதை தேர்ந்தெடுக்கவும். அதில் ரேடியஸ் 16 பிக்சல் வைத்து ஓ.கே கொடுக்கவும். 
  • இப்போது படம் இவ்வாறு மாறியிருக்கும். 
  • அடுத்து பில்டர் மெனு சென்று பிக்சலேட் ==> Halftone என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 
  • தோன்றும் விண்டோவில் max.Radius என்பதில் 12  பிக்சலும், Screen Angels என்பதில் உள்ள Channel 1, Channel 2, Channel 3, Channel 4 ஆகிய அனைத்திலும் 45 என கொடுத்து ஓ.கே கொடுக்கவும். 
  • இப்பொழுது அந்த லேயரை Screen Mode க்கு மாற்றிக்கொள்ளவும். 


அவ்வளவுதான். இனி உங்களுடைய போட்டோவிற்கு ஒரு சூப்பர் பார்டர் எஃபக் கிடைத்துவிட்டது..

குறிப்பு: உங்கள் போட்டோவிற்கு ஏற்றாற்போல Halftone பில்டரின் அளவுகளை கூட்டி அல்லது குறைப்பதன் மூலமாக நல்லதொரு பார்டர் எபக்டினை பெற்றுக்கொள்ள முடியும். 

border-effect-in-cs3-photoshop


இதுபோன்று நீங்களே பல்வேறு எஃபக்ட்களை கொடுத்து மகிழலாம்.

அப்டேட்: 


மேலுள்ள பதிவு பாதி புரிந்தும், புரியாத மாதிரி உள்ள புதியவர்கள் இந்த வீடியோவைப் பாருங்கள்.. ! கண்டிப்பாக உங்களுக்கு முழுமையாக  புரியும்.

Make Easy and Effective Border in Photoshop

போட்டோஷாப்பில் இமேஜ்பார்டர் கொடுப்பது எப்படி?வீடியோ: 



நன்றி.

பதிவு குறித்த சந்தேகங்களை பின்னூட்டத்தில் கேட்கலாம்.. நன்றி..!

Tags: border effects, photoshop image border, photoshop in tamil, photo border, how to create easy border in photoshop.

9 comments:

  1. Replies
    1. வீடியோ டுடோரியல் விரைவில்..!

      Delete
  2. வீடியோ டுடோரியல் அப்டேட் பண்ணியாச்சு..பாமரன் சார்..

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அருமையான பாடம் !

    ஒரு வேண்டுகோள் !

    screen capture செய்ய என்ன மென்பொருள் பயன்படுத்தினீர்கள் ?

    ReplyDelete